லசந்தவின் உடலுக்குள் மறைந்து கிடக்கும் மர்மங்கள்!

828

00112

ஏழு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனை இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பான அறிக்கைகள் விரைவில் கிடைக்கும் என குற்றப் புலனாய்வு பிரிவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மண்டை ஓட்டின் கீழ் பகுதியில் ஸ்ப்ரிங் உடனான கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்ட பகுதி ஒன்று, லசந்தவின் சடலத்தில் உள்ளதா என ஆராய்வதற்கு சட்ட வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

2009ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட லசந்தவின் மரணத்திற்கு முன்னர் அவ்வாறான ஆயுதத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வகையிலான கொலை சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. இதனை அடிப்படையாக கொண்டு, இது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்வதில் ஏதாவது தவறு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ப்ரிங் கொண்ட துப்பாக்கிகள் சில ஜேர்மன் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 10 துப்பாக்கி முன்பதிவு செய்து 8 துப்பாக்கிகள் ஆரம்பத்தில் யாருடைய பாதுகாப்பிற்கு பிரிவிற்கு கொண்டு வரப்பட்டதென்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த காலத்தை சேர்ந்த பிரதான மூன்று பிரபல கைகளுக்குள் இந்த கொலையின் இரகசியம் மறைந்துள்ளதா என்பதனை கண்டுபிடிப்பதற்காக தோண்டி எடுக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனையின் முடிவுரைக்காக காத்திருப்பதாக பொலிஸ் தலைமையக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற அன்று லசந்தவை கொலை செய்வதற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தால், அவர் பயணித்த மோட்டார் வாகனத்தில் அல்லது வெளியே வெற்றுத் தோட்டாக்கள் நிச்சயம் விழுந்திருக்கும்.

அதனால் அவ்வாறான ஒன்று ஏற்பட்டதா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு அறிக்கை தொடர்பில் மீண்டும் ஆய்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸின் விசேட பொலிஸ் குழுக்கள் மூன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

SHARE