ஆப்ரேஷன் தியேட்டரில் குத்தாட்டம் போட்ட மருத்துவர்! வைரல் வீடியோ

254

625-89-560-350-160-300-053-800-160-160-90

கொலம்பியாவில் நோயாளிக்கு அறுவைசிகிச்சை செய்யும் சமயத்தில் மருத்துவர் குதூகலமாக டான்ஸ் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியா நாட்டில் Arte y Cuerpo Clinic என்னும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இங்கு பிரபலமான பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் பணிபுரிந்து வருகிறார்.

ஆபரேஷன் தியேட்டரில் நோயாளி ஒருவர் சிகிச்சைகாக படுத்திருக்க ஒரு செவிலியருடன் பாப் பாடலுக்கு இவர் குதுகலமாக நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த கொலம்பியாவின் கவுன்சிலர் பெர்னார்டோ கியூரா கூறியதாவது, இச்செயல் மருத்துவ தொழில் தர்மத்துக்கு எதிரானதாகும்.

நோயாளி சிகிச்சைக்காக படுத்திருக்கையில் இப்படி நடந்து கொள்வது தவறானதாகும் என்றும், இதுகுறித்து அதிகாரிகளிடம் தான் புகார் தெரிவித்துள்ளதாகவும் நிச்சயம் அந்த மருத்துவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அந்த மருத்துவரால் தான் பாதிப்படைந்ததாக கூறும் கேல்டிரோன் என்னும் பெண் கூறுகையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு சர்ஜரி செய்து கொள்வதற்காக அந்த மருத்துவரை நாடினேன்.

ஆனால் அவர் 20 நாட்கள் தாமதப்படுத்தியும் தவறான சிகிச்சை எனக்கு அளித்தார், இதனால் வேறொரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பல்வேறு புகார்கள் குவிந்த வண்ணம் இருப்பதால், விரைவில் குறித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

SHARE