இராணுவ கோப்ரல் மர்மமான முறையில் மரணம்

246

dead-body-jpg1

கொத்மலையில் இராணுவ கோப்ரல் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

41 வயதான இராணுவ கோப்ரல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தின் சமிக்ஞை அறையில் பணியில் இருந்த வேளை, சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இராணுவ வீரர் காலியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE