ஆண்களை தாக்கும் நோய்கள். ஓர் எச்சரிக்கை!

522

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இரு பாலர்களுக்கும் உடம்பில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் ஹார்மோன் சுரக்கும் தன்மையில் வேறுபடுகிறது.

ஹார்மோன்களின் ஏற்படும் மாற்றங்களினால் ஒருசில நோய்கள் ஆண்பால், பெண்பால் என வேறுபட்டு வருகிறது.

பொதுவாக ஆண்களுக்கு பெண்களை விட மன அழுத்தம் அதிகம்.

இதற்கு காரணம் குடும்பச் சூழல் மற்றும் வேலை அழுத்தம். அதோடு வயதும் சில நோய்களுக்கு காரணமாகிறது.

ஆண்களுக்கு மட்டும் எளிதில் தொற்றக் கூடிய சில வகை நோய்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்!

அல்சைமர்

அல்சைமர் நோயானது, ஆண்களுக்கு 60 வயதிற்கு பின் ஏற்படக் கூடிய நோயாகும்.

இதனால் நாளுக்கு நாள் ஆண்களுக்கு ஞாபக மறதியை ஏற்படுத்தும்.

மேலும் இந்த நோய்க்கு வேறு பல அறிகுறிகள் தென்படாது. எனவே இந்த நோய் உள்ளதை உணர்ந்து தக்க சமயத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

டெஸ்டோடிஸ்டிரான் குறைவு

ஆண்களுக்கு வயது அதிகமாகும் போது, அவர்களுக்கு பாலுணர்வைத் தூண்டும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மானின் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.

இதனால் ஆண்கள் உடலுறவில் அதிக நாட்டமின்மை ஏற்படும். இதற்கு மருத்துவரிடம் சென்று சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதய நோய்

ஆண்களுக்கு 40 வயதிற்கு மேல் தாக்கும் மிக முக்கிய நோய்களில் இதய நோய் ஒன்றாக உள்ளது.

மன அழுத்தம், உடல் பருமன், கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுதல் போன்ற பல பிரச்சனைகளால் இதய நோய்கள் வருவதற்கு காரணமாக உள்ளது.

இதனால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்தால், உடனே மருத்துவரிடம் சென்று இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

புரோஸ்டேட் புற்று நோய்

ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியில் வீக்கம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை போன்றவை புரோஸ்டேட் புற்று நோய்க்கு காரணமாக உள்ளது.

இந்த பிரச்சனைகள் ஏற்படும் போதே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தால், புற்றுநோயானது, ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியில் வராமல் தடுத்து விடலாம்.

சர்க்கரை வியாதி

ஆண்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயினால், டயாபடிக் ரெட்டினோபதி என்னும் கண் பார்வைகள் இழப்புகள், கால்கள் செயலிழக்கும் பிரச்சனைகள் போன்ற நோய்கள் அதிகமாக ஆண்களை தாக்குகிறது.

மன அழுத்தம்

ஆண்கள் மது மற்றும் புகை போன்ற பழக்கங்களுக்கு அதிகமாக ஆளாகுவதால், மனஅழுத்தம் ஏற்படுகிறது.

இதனால் பல ஆண்களுக்கு தூக்கமின்மை, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

SHARE