
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். நியூசிலாந்து விஜயத்தை முடித்துக் கொண்ட பிரதமர் தற்போது இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணம் செய்கின்ற பிரதமர் புதுடெல்லியில் நடைபெறவுள்ள பொருளாதார மாநாடு ஒன்றில் பங்கேற்க உள்ளதுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.