முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின பெயரிலான அபிவிருத்தித் திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுடன் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, அதற்கு முன்னர் பதவி வகித்த ஜனாதிபதியின் பெயர் பலகைகளை அகற்றி தமது பெயரை சூட்டிக்கொண்டதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பெயர் பொறிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரைத் தடாக அரங்கு பெயர்ப் பலகையை மஹிந்த அழித்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.