எனது கணவனை மீட்க உதவி செய்யுங்கள் மனைவி உருக்கமான வேண்டுகோள்!! (வீடியோ,படங்கள் இணைப்பு)

316

 

எனது கணவனை மீட்க உதவி செய்யுங்கள் மனைவி உருக்கமான வேண்டுகோள்!! (வீடியோ,படங்கள் இணைப்பு)

unnamed-9 unnamed-14

எனது கணவனை மீட்க உதவி செய்யுங்கள் மனைவி உருக்கமான வேண்டுகோள்!! (வீடியோ,படங்கள் இணைப்பு)

நேரியகுளம் கிராமத்தில் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்துவரும் செய் முகதீன் நுர்ஜகான் தனது கணவரான அப்துல் கமீட் உமர் கக்தாப் புலிகளுக்கு உதவிசெய்தார் என கூறி கைது செய்யப்பட்டு கடந்த ஏழு வருடங்களாக சிறையிலிருப்பதாகவும் தனது வறுமை காரணமாக அவரை வழக்காடி மீட்கமுடியாத நிலையில் புலம்பெயர்ந்த மக்களின் உதவியை கோரி நிற்கிறார். அந்தவகையில் எமது செய்திச்சேவைக்கு கருத்து தெரிவித்த அவர்

நேரியகுளம் மகாசியம்பலகஸ்கட கிராமத்தில்  2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி எனது கணவர் வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட எனது கணவர் 12 நாட்களின் பின் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கறிஞர்கள் எனது கணவரின் வழக்கை எடுக்க மறுத்தனர் காரணம் தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலில் கொல்லப்பட்ட 28 பேரில் சில வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டதாகவும் அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வழக்காடினால் தங்களுக்கு ஆபத்து வரும் என பயந்த நிலையில் யாரும் முன்வரவில்லை என குறிப்பிட்டார்.

அப்படியான நிலையில் கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான வழக்கறிஞர் எனது கணவர் சார்பாக வாதாட முன்வந்த நிலையில் அவர் கேட்ட பணத்தை வழங்க முடியாமல் திண்டாடி வருகிறேன். இதன் காரணமாக மூன்று வருடங்களாக எனது கணவரின் வழக்கானது நீதிமன்றத்துக்கு எடுக்கப்படாமலே இருந்து வந்த நிலையில் கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் 2012 ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞருக்கான பணம் வழங்கப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு வழக்கை முன்னெடுத்து செல்ல வேண்டுமானால் தனக்கு வழங்கப்படும் பணம் அதிகரித்து தரப்பட வேண்டுமென வழக்கறிஞர் கோரியதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு பணம் வழங்க மறுத்த நிலையில் வழக்கறிஞர் வழக்கிற்கு ஆஜராவதில்லை என தெரிவித்தார்.

எனது மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் எனக்கு பொருளாதாரப்பிரச்சனை ஒரு பக்கம் புலிகளுக்கு உதவிசெய்ததாகக் கூறி என்னையும் எனது குழந்தைகளையும் எனது உறவுகளே ஒதுக்கி வைக்pறார்கள் எனது கணவரை மீட்க புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் எனக்கு உதவிசெய்ய வேண்டும் என உருக்கமான கோரிக்கை விடுத்தார்.

S.M.NOORJAN

A/C  NO – 3973005

BANK OF CAYLON

MADAVACHCHIYA

SHARE