அமெரிக்கா செல்ல இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

214

625-256-560-350-160-300-053-800-461-160-90

அமெ­ரிக்­காவில் நிரந்தர வதி­விட உரிமை (கிறீன் கார்ட்) வழங்­கு­வ­தற்கு 50,000 பேரை தெரி­வு ­செய்­வ­தற்கு இன்று முதல் இணை­யத்தில் விண்­ணப்­பிக்­க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெ­ரிக்க அரசு வரு­டாந்தம் பல நாடு­களை சேர்ந்த 50,000 பேரை லொத்தர் குலுக்கல் முறையில் தெரி­வு­ செய்து நிரந்­தர வதி­விட உரிமை வழங்கி வரு­கி­றது.

அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தினால் இதற்­காக வரு­டாந்தம் லொத்தர் குலுக்கல் நடைபெற்று வருகின்றதுடன், Diversity Visa Program எனும் இந்தக் குழுக்கள் முறையில் விண்­ண­பிப்­ப­தற்கு இலங்­கை­யர்­களும் தகு­தி­யுடை­­வர்கள் என அறிவிக்கப்பட்­டுள்­ளது.

2018ஆம் ஆண்டில் அமெ­ரிக்க வதி­விட உரிமை பெறு­வ­தற்­கான DV-2018 குலுக்கல் திட்­டத்­துக்கு அமெ­ரிக்க நேரப்­படி இன்று ஒக்­டோபர் 4ஆம் திகதி நண்பகல் முதல் எதிர்­வரும் நவம்பர் 7 ஆம் திக­தி­ வரை விண்­ணப்­பிக்­க கால வரையறை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் www.dvlottery.state.gov எனும் இணை­யத்­த­ளத்தின் மூலம் மாத்­தி­ரமே இதற்­காக விண்­ணப்­பங்களை விண்ணப்பிக்க முடியும் என அறிவித்தல் விடப்பட்டுள்ளது.

இவ்­விண்­ணப்­பத்­துக்கு கட்­டணம் எதுவும் அற­வி­டப்­பட மாட்­டாது எனவும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அமெரிக்க தூதரகம் மேலும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE