இலங்கை – இந்திய பிரதமர்கள் இன்று கலந்துரையாடல்

236

5829tamil_news_nellai

இலங்கை – இந்திய பிரதமர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.

நியூசிலாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று புதுடெல்லி சென்றடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

இதன்போது இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றும் நாளையும் பல்வேறு பட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

SHARE