முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களின் பின்னால் அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு புலனாய்வாளர்களை ஈடுபடுத்தி தகவல்கள் சேரிக்கப்படுவதனால் விசேட பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கூட்டு எதிர்கட்சியினை அனைத்து தலைவர்களுக்கும் அறிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி கூட்டங்களில் புகைப்படம் எடுப்பவர்கள் மற்றும் வீடியோ செய்யும் சந்தேகமான நபர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியின் இரகசிய கலந்துரையாடல்களின் போது அந்த பகுதிகளில் நடமாடும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் தொடர்பில் உறுதி செய்து கொள்ளுமாறும், இரகசிய கலந்துரையாடல்களின் போது வருகைதரும் நபர்களை சோதனையிட்டு உள்ளே நுழைய அனுமதிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.