வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, வட்டுப்பித்தான் மடு முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்திற்கு, அவர்களது தேவையின் அடிப்படையில் குழாய்க்கிணறு அடிப்பதற்காக நிதி ஒதுக்கி திட்டம் நிறைவுற்றுள்ள நிலையில் அதற்கான காசோலையை 04-10-2016 செவ்வாய்க்கிழமை மதியம் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கோவில் நிர்வாகசபை தலைவரிடம் வழங்கிவைக்கப்பட்டது, குறித்த காசோலையை அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் ஆகியோர் இணைந்து வழங்கிவைத்தனர்.
