கடற்றொழிலை வாழ்வாதாரமாகக்கொண்ட மக்களுக்கு வலைகள் வழங்கிவைப்பு

240

மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த 03 குடும்பங்களுக்கு, அவர்களது தேவை கருதி வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும்முகமாக வலைகள் அடங்கலான ஒவ்வொன்றும் சுமார் 20,000 ரூபாய் பெறுமதியான உள்ளீடுகளை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஜி.டி.லிங்கநாதன் அவர்கள் தனது 2016 ஆம் ஆண்டிற்க்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து, வடக்கு மீன்பிடி அமைச்சினூடாக கொள்வனவு செய்யப்பட்டது.

அப்பொருட்களை வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரனாதன் ஆகியோர் இணைந்து, மன்னாரில் உள்ள அமைச்சர் உப அலுவலகத்தில் வைத்து குறித்த பயனாளிகளிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் வைபவம் 04-10-2016 செவ்வாய் மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது.

unnamed-1

unnamed-2

unnamed-3

SHARE