சர்வதேச முதியோர் தினம்

239

பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலகங்களுடன் இணைந்து நடாத்திய ‘முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாளைய தினம்’ எனும் தொனிப்பொருளிலான அமைதிப்பேரணியும், சர்வதேச முதியோர் தின நிகழ்வும் இன்று ஒக்டோபர் மாதம் 4ம் திகதி நுவரெலியாவில் நடைபெறற்து. காலை 9:30 மணிக்கு நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நுவரெலியா உதவி பிரதேச செயலாளர் திரு. னு.யு.P தனன்சூரிய அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அமைதிப் பேரணியானது புதிய நகர மண்டபம் (சினிசிட்டா) வரை சென்ற பின், காலை 11:00 மணிக்கு முதியோர் தின நிகழ்வுகள் புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றன. இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி. மல்லிகா அமரசேன, பெரெண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின்; பொது முகாமையாளர். திரு. தயாந்த பெர்னாண்டோ மற்றும் உதவி பொது முகாமையாளர் திரு. மொஹம்மட் ரஹீம், பிரதேச செயலக அதிகாரிகள், தோட்ட முகாரமயாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான முதியோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது சிரேஸ்ட பிரஜைகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்: மு. ராமச்சந்திரன்

unnamed-4

unnamed-5

unnamed-6

unnamed-7

unnamed-8

unnamed-9

SHARE