இந்திய அணி முதலிடத்திற்கு வந்ததால் ஆக்ரோஷ ஆட்டம் தொடரும் என்று அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 174 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது.
இந்த வெற்றியின் மூலம் தற்போது இந்தியா 113 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி 4வது முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த வெற்றி குறித்து அணித்தலைர் கோஹ்லி கூறுகையில், தரவரிசையில் முன்னிலை வகிப்பது என்பது ஊக்கம் அளிக்கும் விடயம் மட்டுமே. நாங்கள் அனைத்து போட்டியிலும் வெற்றி பெறவே விரும்புகிறோம்.
முதலிடத்திற்கு வந்துவிட்டதால் மெத்தனமாக இருக்க மாட்டோம். எங்களது ஆக்ரோஷம் தொடர்ந்து வெளிப்படும்.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எங்கள் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் எங்களால் விளையாட முடியும் என்று கூறியுள்ளார்.