வவுனியா மண்ணில் வறுமையின் கொடூரத்திலும் சாதித்துக்காட்டியுள்ளார் பதினெட்டு வயதான செல்வி கிருஷ்ணமூர்த்தி கனகேஸ்வரி இவர் செய்த சாதணை பலரால் அறியப்படாமல் உள்ளது.
இது ஓர் வேதனைக்குறிய விடயமாகும் வவுனியா பூம்புகார் கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளின் புதல்வி கனகேஸ்வரி சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ள கனகேஸ்வரிக்கு அதில் தனது நாட்டத்தை காட்டுவதற்கு குடும்ப வறுமை தடையாக அமைந்தது ஆயினும் பூம்புகார் கண்ணகிவித்தியாலயத்தின் மாணவியாகிய இவர் கடந்த மாதம் (22.09.2016) அன்று பதுளையில் இடம்பெற்ற 5000m வேகநடைக்கான இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய வேகநடை போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
அத்துடன் நம் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார் இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இம்மாணவி தனது குடும்ப வறுமை காரணமாக தனது மேல்படிப்பையோ அல்லது தான் சோபிக்கும் விளையாட்டுத்துறையிலோ தொடர்ந்து ஈடுபாட்டை வெளிக்கொணர முடியாமால் தன் குடும்ப பாரத்தை தன் மேல் போட்டுக்கொண்டு இப்பொழுது வவுனியா இராசேந்திரகுளம் “மெகாலைன்” ஆடைத்தொழிற்சாலையில் தொழிலாழியாக மாறிவிட்டாள் இதேவேளை இந்த ஆடை தொழிற்சாலையின் உத்தியோகத்தர்கள் நிர்வாக அதிகாரிகள் இப்பெண்ணுக்கு தம்மாலான சகல உதவிகளையும் அளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன் தங்கப்பதக்கம் வெல்வதற்கும் இவர்களே அப்பெண்ணை ஊக்குவித்ததுடன் அப்பெண்ணிற்குறிய முழு செலவினையும் ஏற்று போட்டியில் பங்கேற்க வழிவகுத்துள்ளனர் நான்கே மாதகால பயிற்சியை மட்டுமே பெற்ற கனகேஸ்வரி இவ்வாறு தேசிய ரீதியில் முதலிடம் பெற்று எம்மண்ணிற்கு பெருமை ஏற்படுத்திக்கொடுத்திருப்பது வியத்தகு விடயமாகும்.