மீண்டும் இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை பேச்சுவார்த்தை ஆரம்பம்!

210

srilanka_2915931f

இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு செயல்திறனான தீர்வுக்காணும் வகையில் இலங்கை இந்திய அதிகாரிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி அன்று சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பு, புதுடில்லியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் மீனவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, 2017 ஆம் ஆண்டு வெசாக் தினக்கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக பங்கேற்கவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்புக்கு இந்திய பிரதமர் மோடி, உடனடியாக பதில் வழங்கவில்லை.

இதற்கிடையில் இலங்கையில் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்திய இலங்கை பொருளாதார உடன்படிக்கை தொடர்பிலும் இலங்கை இந்திய பிரதமர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

SHARE