21 இராணுவ கேணல்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தில் கடமையாற்றி வரும் 21 சிரேஸ்ட கேணல்கள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
திலக் உபயவர்தன, வசந்த மதொலா, எச்.எல்.குருகே, எம்.ஆர்.அபேசிங்க, சாந்த குமார ஈஸ்வரன், நிசாந்த ஹேரத், உபாலி ராஜபக்ச, சுஜீவ செனரத்யாபா, சஞ்சய வனசிங்க, அசோக பீரிஸ், பிரியந்த கமகே, சுமித் பிரேமலால், ரொனால்ட் பொகொடவத்த, சிசிர பிலபிட்டிய, சமந்த சில்வா, சாதர சமரக்கோன், உதித பண்டார, ஈ.எஸ்.ஜயசிங்க, நிசாந்த மானகே, எம்.ரீ.திஸாநாயக்க, ஆர்.ஏ.கே ரணவீர ஆகிய 21 கேணல்கள் இவ்வாறு பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜானக வல்கமகேவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள பதவி உயர்வு ஆவணத்தில் இந்த பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.