அதிக வேகத்தால் நேர்ந்த விபரீதம்! ஒருவர் பலி! ஒருவர் ஆபத்தான நிலையில் ….

244

evening-tamil-news-paper_79488337040

வடமராட்சி கிழக்கு, குடத்தனை விளாங்காட்டுப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டினையிழந்த மோட்டார் சைக்கிள் வீதியோர முட்கம்பி வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் இன்னொருவர் படுகாயமடைந்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அம்பன், குடத்தனையைச் சேர்ந்தவர்களான ஜெயராசா பிரதாஸ் (வயது 22) நாதகிருஷ்ணன் மகிந்தன் (வயது 23) ஆகிய இருவருமே படுகாயங்களிற்குள்ளான நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஜெயராசா பிரதாஸ் என்பவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மற்றைய நபர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

அதிக வேகமே இவ்விபத்துக்கு காரணம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE