மட்டக்களப்பு உப்போடை பகுதியில் ஏழு அடி நீளமான முதலையுடன் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

224

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை பகுதியில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போனவரின் சடலம் இன்று (06) காலை கல்லடி பாலம் அருகில் கரையொதுங்கியுள்ளது.

மட்டக்களப்பு வாவியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் மீன்பிடிக்கச்சென்ற சின்ன உப்போடை,வாவிக்கரை வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.அழகேந்திரராஜா (62வயது) வீடு திரும்பாத நிலையில் அவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடும்பஸ்த்தரின் சடலம் இன்று காலை கல்லடி பாலம் அருகில் உள்ள லேடிமெனிங் வீதியில் உள்ள வாவிப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் கூறியுள்ளார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1

குறித்த நபரின் சடலம் சேதமடைந்த நிலையில் காணப்படுவதன் காரணமாக குறித்த நபரை முதலை தாக்கியிருக்கலாம் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு வாவிப்பகுதியில் சுமார் ஏழு அடி நீளமான முதலையும்இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-2

SHARE