டோனி படத்திற்காக மனைவி சாக்‌ஷி செய்த தியாகம் என்ன தெரியுமா?

217

625-500-560-350-160-300-053-800-748-160-70-10

இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் படத்திற்காக மனைவி சாக்‌ஷி செய்த தியாகம் தற்போது வெளியாகியுள்ளது.

அண்மையில் இந்திய கிரிக்கெட் விரர் டோனியின் வாழ்வை சித்தரித்து எம்.எஸ்.டோனி தி அண்டோல்டு ஸ்டோரி என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.

அப்படம் வெளியானதில் இருந்து சில சுவாரஸ்மான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

டோனியின் படத்தில் சாக்‌ஷி கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடித்திருப்பார்.

கியாராவுக்கு சாக்‌ஷி தான் டோனியை சந்தித்தது, டோனி என்னவெல்லாம் செய்வார் என்பதை போன்ற பல தகவல்களை கூறியுள்ளாராம்.

அது போல சாக்‌ஷி தான் திருமணத்தின் போது எந்த உடை அணிந்து திருமணம் செய்தாரோ அதே உடையை கியாராவுக்கு கொடுத்து நடிக்கச் சொன்னாராம்.

படத்தின் அக்காட்சிகளைக் கண்டு பலரும் சாக்‌ஷி-யை தொடர்பு கொண்டு உண்மையான திருமண நிகழ்ச்சியை நினைவுப்படுத்தும் விதத்தில் இருந்ததாக கூறினார்களாம்.

மேலும் படத்தில் டோனி சாக்‌ஷி-யை முதன் முதலில் கொல்கத்தாவில் உள்ள உணவகத்தில் பார்க்கும் காட்சிகள் மிகவும் அற்புதமாக இருந்ததாக சாக்‌ஷி கூறியதாக கூறப்படுகிறது.

SHARE