வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் அவர்களின்
இறுதிக் கிரியைகள் இன்று இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மணற்குடியிருப்பில் அமைந்துள்ள அன்ரனி
ஜெகநாதனின் இல்லத்திலிருந்து இன்று 10.00 மணியளவில்
முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் வன்னிப்பாராளுமன்ற
உறுப்பினர். சிவமோகன் அவர்களின் ஏற்பாட்டில் இறுதி
அஞ்சலிக்கூட்டம் இடம் பெற்றுள்ளது.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின்
தலைவருமான மாவை சேனாதிராஜா இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து
மலர் அஞ்சலி செலுத்தி அஞ்சலி செய்ததோடு யாழ்
பாராளுமன்ற உறுப்பினர்களும் வன்னிப்பாராளுமன்ற
உறுப்பினர்களும் வட மாகாணசபை உறுப்பினர்க்ளும் அஞ்சலி
செலுத்தியுள்ளனர். பெருந்திரளான பொதுமக்களும் இறுதி அஞ்சலி
செலுத்தப்பட்டு அவரது ஈமைக்கிரிகைகள் உண்ணாப்பிலவு கத்தொலிக்க
செமக்காலையில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேவை விபரம். அன்ரனி ஜெகநாதன்.
01 வ.வற்றாப்பளை றோ.க.க.உ.வி. 18.05.1977 – 14.02.1979
02 ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை
கோப்பாய். 15.02.1979 – 31.12.1981
03 குழி.கொட்டம்பிட்டிய முஸ்லிம் ம.வி. 01.01.1982 – 18.05.1982
04 மு.முல்லைத்தீவு முஸ்லீம் ம.வி. 19.05.1982 – 27.05.1982
05 மு.முல்லைத்தீவு ம.வி. 28.05.1982 – 31.10.1989
06 மு.சிலாவத்தை இ.த.க பாடசாலை. 01.11.1989 – 31.01.1993
07 மு.வலயன்மடம் அ.த.க பாடசாலை. 01.02.1993 – 31.12.1993
08 மு.முள்ளிவாய்க்கால் மேற்கு க.உ.வித் 01.01.1994 – 30.04.1999
09 மு.முல்லைத்தீவு ம.வி. 01.05.1999 – 24.01.2005
10 கோட்டக்கல்வி அலுவலகம் க.து.பற்று. 25.01.2005 – 10.05.2008