அனுராதபுரம் நகரில் பாலியல் தொழில்! மூன்று பெண்கள் கைது!

240

timthumb

அனுராதபுரம் நகரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்களை அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களான இந்த பெண்கள் நகரில் சில இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலை அடுத்து அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 44, 45 மற்றும் 53 வயதானவர்கள் எனவும் இவர்கள் மதவாச்சி, பரசன்கஸ்வெவ மற்றும் கண்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண்கள் இன்று அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

SHARE