அட்டன்-கொழும்பு பழையை வீதியின் செனன் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் ரொத்தஸ் மாணாப்புல் காட்டுப் பகுதியில் 07.10.2016 அன்று பிற்பகல் 2 மணியளவில் தீ பரவியுள்ளது.
கடந்த சில நாட்களாக மலையகப் பகுதிகளில் வெயிலான காலநிலை தொடர்வதனால் காட்டுக்கு இனந் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டிருக்கலாம்.
வனஜீவராசிகள் அதிகமாக வசிக்கும் மேற்படி காட்டுக்கு தீ வைக்கப்பட்டுமையினால் மிருகங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க யாரும் முன்வராத நிலையில் தீப் பரவல் அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்