தொழிலாளர்களின் சம்பளவுயர்வு கோரிய தொடர் போராட்டத்தினால் பயணிகள் போக்குவத்துத்துறையை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அட்டன் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் அட்டன் தனியார் பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 12 நாட்களாக அட்டன் பிரதேசத்தில் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் வீதிகள் மறிக்கப்பட்டு போக்குவரத்து மேற்கொள்ளப்பட முடியாது தடையேற்பட்டது. இந்நிலையில் அட்டன் டிப்போவிற்கு 40 லட்சம் ரூபாய் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவவித்தனர் மேலும் டிப்போவிலிருந்து சேவைக்கு வெளியேரும் பஸ்வண்டிகள் வீதிகள் தடைப்படுவதனால் சேவை இடம்பெறாமலே மீண்டும் டிப்போவிற்கு வருகின்றது. அதேபோல சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சேவையையும் முன்னெடுக்க முடியாதுள்ளமையினால், தொழிலாளர்களினால் வீதிகளை மறித்து போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பார்களேயானால் போக்குவரத்து சேவையை நிறுத்திவைக்க உத்தேசித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்