12 வது நாளாகவும் தொடரும் போராட்டம் – பிரதான பாதைகளின் போக்குவரத்துக்கள் தடை

218

பெற்றுத்தருவதாகக் கூறிய ஆயிரம் ரூபாய் எங்கே எனக்கோரி 12வது நாளாகவும் தொடர்கிறது தொலாளர்களின் போராட்டம்.

அட்டன்-கொழும்பு பிரதான வீதியிலும், அட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சந்தியிலும் டிக்கோயா நகரத்திலும் ஆர்ப்பாட்டம் கடந்த 07.10.2016 காலை 10 மணிமுதல் தொடர்கின்றது.

தொழிற்சங்கங்கள் ஆயிரம் ரூபாய் பெற்றுத்தருவதாகக் கூறி தற்போது 730 ரூபாய் சம்பளத்தை வழங்க முற்படுகின்றது. வாக்குறுதியளித்ததுபோல் ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடு, 18 மாதங்களுக்கான நிலுவைப் பணத்துடன் வாரத்தில் 6 நாட்கள் வேலை வேண்டும் எனக் கோசமிட்டவாறு கருப்புக்கொடிகளுடன் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செனன், வட்டவளை, குயில்வத்தை தோட்டப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் செனன் சந்தியிலும், டிக்கோயா, வனராஜா, போடைஸ் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டிக்கோயாவிலும், நோர்வூட், போட்ரி, அயரபி, கெந்தகொலை, பிரதேசத் தொழிலாளர்கள் நோர்வூட் சந்தியிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

அரசியல்வாதிகள் போராட்டங்களைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடர்கின்றது. பாதையை மறித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதனால் கொழும்பு, அட்டன், கண்டி, நோட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவ, பலாங்கொடை பகுதிகளுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed-1

unnamed-2

unnamed-3

unnamed

SHARE