மஹிந்தவின் இரகசிய கேம்! இரத்தினபுரியில் பிசுபிசுத்துப் போனதா?

515

dgb

சமகால அரசாங்கத்திற்கு எதிராக பாதயாத்திரை ஒன்று ஆரம்பித்த நாளில் இருந்து பின்னடைவை சந்தித்து வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மீண்டும் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெறும் பேரணியின் போது புதிய கட்சி தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பேரணியின் போது புதிய கட்சி தொடர்பல் எந்தவொரு கருத்தையும் வெளியிடாமல் தேர்தல் ஒன்றுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தலைமைத்துவத்தை மாற்றி, தனது அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என்றே மஹிந்த தெரிவித்திருந்தார்.

இது ஜனநாயகமற்ற பழைய விளையாட்டு மற்றும் இது இரகசியமாக கொடுக்கப்படும் விளையாட்டு ஒன்றே தவிர வெளிப்படையாக மேற்கொள்ளும் நடவடிக்கை அல்லவென குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தலைமைத்துவத்தை மாற்றி புதிய அரசாங்கம் அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது தொடர்பில் சந்தேகமே உள்ளது.

கூட்டு அரசாங்கத்தினால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை மைத்திரி – ரணில் இருவரும் இணைந்து வழங்குகின்றனர். இதன்மூலம் இரு பிரதான கட்சிகளின் உறுப்பினர்களும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

இரண்டாவதாக பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவின் செயற்பாடுகள் ஊடாக கொடுக்கப்படுகின்ற அழுத்தம். தற்போது வரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 90 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சி மாற்றம் என்பது ஆபத்தான ஒரு விளையாட்டாகும்.

நாடாளுமன்றத்தின் தலைமைத்துவத்தில் மாற்றம் மேற்கொண்டு அரசாங்கம் ஒன்று ஆரம்பிக்கும் கனவு மஹிந்த ராஜபக்சவினால் உட்பட நம்ப முடியாத ஒன்று என குறிப்பிடப்படுகின்றது.

எனினும் தன்னை சுற்றியிருக்கும் நபர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறான கற்பனை கதைகளை மஹிந்த கூறியதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியல் ரீதியாக மஹிந்தவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், பெருமளவு மக்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் கிராமப்புறங்களில் மஹிந்த மீதான மக்களின் ஆதரவு வலுவாக உள்ளதையே இரத்தினபுரி பேரணி வெளிப்படுத்தியுள்ளது.

SHARE