வெந்தயத்தை எப்படி சருமத்துக்கு பயன்படுத்துவது?

518

venthayamவெந்தயம் ஃப்ளேவினாய்டு, அல்க்லாய்டு, விட்டமின், மினரல் என பல சத்துக்களை பெற்றது.

அனிமியா இருப்பவர்கள், அதிக பித்த உடம்பு உள்ளவர்கள் வெந்தய்த்தை கீரையாகவோ, பருப்பாகவோ சாப்பிட்டு வந்தால் ரத்டஹ் விருத்தியாகும். குளிர்ச்சி உண்டாகும்.

வெந்தயம் தலைமுடி வளர்ச்சிக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வாரம் ஒரு நாள் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் பிரச்சனையே இருக்காது.

அது சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை எபப்டி போக்குகிறது என தெரிந்து கொள்ளலாமா?

முகப்பரு :

வெந்தயத்தை 2 ஸ்பூன் எடுத்து ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.நீர் குளிர்ந்ததும், சிறிது முகத்தில் தடவி சில நிமிடங்களுக்கு பிறகு அதே நீரில் கழுவுங்கள். முகப்பருக்களை விரைவில் குணப்படுத்தும்.

நிறம் அதிகரிக்க :

வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அதனுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பேக் போல் போடுங்கள்.

20 நிமிடம் கழித்து கழுவுங்கள். வெயிலினால் நிறம் மனியிருந்தால் மீண்டும் பழைய நிறம் பெறுவீர்கள்.

சரும அரிப்பிற்கு :

முகப்பரு, கரும்புள்ளி மற்றும் வறண்ட சருமத்தினாலும் அரிப்பு எரிச்சல் உண்டாகும். வெந்தய பேஸ்ட்டை முகத்தில் போட்டால் காய்ங்களையும் சரும பாதிப்புகளையும் விரைவில் ஆற்றிவிடும்.

முதுமை தோற்றத்தை மாற்ற :

சுருக்கம் மற்றும் தளர்ந்த சருமம் இருந்தால், ஊறிய வெந்தயத்துடன் தேன் சேர்த்து அரைத்து முகத்தில் போடுங்கள். முகம் இறுகி இளமையான சருமம் பெறுவீர்கள்.

வறண்ட சருமத்திற்கு :

வெந்தயப் பொடியுடன் சிறிது பால் அல்லது நீர் கலந்து முகத்தில் போட்டு வந்தால், சருமம் ஈரப்பதம் பெற்று மிருதுவாகும்.

அழுக்குகளை அகற்ற :

முகத்திலுள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற வெந்தயப்பொடியுடன் சிறிது நீர் கலந்து முகத்தில் தேய்த்து கழுவவும். முகம் சுத்தமாகி பளிச்சிடும்.

SHARE