மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமலும் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறிய வகையிலும் மண் ஏற்றி சென்ற வாகனங்களை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இன்று காலை மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இன்றி வெல்லாவெளி பகுதியில் இருந்து மண் ஏற்றிவந்த ட்ரக்டர் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பட்டிருப்பு பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இந்த ட்ரக்டரை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேபோன்று நேற்று அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறிய வகையில் மண் கொண்டுசென்ற இரண்டு கன்டர் வாகனங்களை வீதிப்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கைப்பற்றியதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நேற்றும் இன்றும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மூவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகநபர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.