பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் காயம்

220

பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் காயமுற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலையிலிருந்து டயகம நோக்கிச்சென்ற தனியார் பஸ் வாலமலை எல்பட பகுதியிலே 10.10.2016 அதாவது இன்றைய தினம் காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாரினால் மண்மேட்டில் மோதுண்டே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

அக்கரப்பத்தனை தமிழ் வித்தியாலய மாணவர்கள் 7 பேர் சிறு காயமுற்ற நிலையில் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed

SHARE