களுத்துறை புளத்சிங்கள பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவி மற்றும் மாணவனுக்கு கொடூரமான தண்டனையை வழங்கியுள்ளார்.
மாணவியை குளியலறையிலும் மாணவனை பாடசாலையின் களஞ்சியத்திலும் அடைத்து வைத்து இருவரையும் அதிபர் கடுமையாக தாக்கியுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவனும் மாணவியும் வகுப்பறையில் பேசிக்கொண்டிருந்தனர் என்ற குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
களஞ்சியத்தில் அடைக்கப்பட்டிருந்த மாணவன் ஃபெரஸ்ட் சல்பைட் என்ற மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
குறித்த மாணவன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை எனவும் மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.