பிரபல நடிகை மாலினி பொன்சேகாவிற்கு இருதய சத்திரசிகிச்சை!

225

%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d

பிரபல நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாலினி பொன்சேகாவிற்கு அவசர இருதய சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அண்மையில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மாலினி பொன்சேகாவின் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலினி பொன்சேகா குணமடைய வேண்டுமெனக் கோரி நாளை மாலை 6.00 மணிக்கு பெல்லன்வில ரஜமஹா விஹாரையில் போதி பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, கலைஞர்கள் மற்றும் ரசிகர்களினால் இந்த பூஜை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிங்கள திரைப்பட உலகின் சிரேஸ்ட நடிகையாக மாலினி பொன்சேகா கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE