வீதியை கடக்க முற்பட்ட மாணவன் படுகாயம்!

233

download-1

அம்பலாந்தோட்டை, மல்பெத்தால மகா வித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன், அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை, பாதசாரி கடவைக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்ட மாணவன் மீது, பாடசாலை இருக்கும் திசை நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் வாகனத்தை செலுத்திய சாரதியை உடனடியாக கைது செய்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE