எங்கே என்னுடைய தந்தை! ரத்தம் சொட்ட சொட்ட கதறி அழும் சிறுமி

227

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

சிரியாவில் விமான தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சிறுமி ஒன்று மருத்துவமனையில் தனது தந்தையை கேட்டு அழுத காட்சி உலக அளவில் வைரலாகியுள்ளது.

சிரியாவில் போராட்டக் குழுக்களை சிதறடிக்கும் நோக்கில் அந்த நாட்டு விமானப்படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த தாக்குதலில் பெரும்பாலும் அப்பாவி மக்கள் சிக்குண்டு பலியாவதாக பல்வேறு சம்பவங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில் திங்களன்று அதிகாலையில் சிரியா விமானப்படை Talbiseh பகுதியில் வான் தக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இருந்து சிறுமி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து மருத்துவமனை ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளார்.

படுகாயமடைந்துள்ள அந்த சிறுமி தனது முகத்தில் வழியும் ரத்தத்தை துடைத்துக் கொண்டே தனது தந்தையை கேட்டு அழுதது பார்ப்போரை கதி கலங்க வைத்துள்ளது.

 

இந்த காட்சியானது உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு சில மணித்துளிகளுக்கு பின்னர் அந்த தந்தை பதைபதைப்புடன் வந்து சிறுமியை மீட்டுள்ளார்.

குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அந்த இரவில் 4 முறை தொடர்ந்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பொதுமக்களில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

SHARE