ஊழல் மோசடி விவகாரத்தில் அமைச்சர் சத்தியலிங்கத்தையும், டெனீஸ்வரனையும் வீதிக்கு இழுப்பதே முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இரகசியத் திட்டம்.

581

அண்மைக்காலமாக வடமாகாணசபையில் ஊழல் மோசடி விவகாரங்கள் பெருவாரியாக தலைதூக்கியுள்ளதாக முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரனால் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. இதில் முக்கிய புள்ளிகளான சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நன்னீர் மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன், விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இந்த மூவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் சராமாரியாக சுமத்தப்பட்டுள்ளது.

untitled-1-copy

உண்மையில் இந்த அமைச்சர்கள் ஊழல் மோசடியில் ஈடுபட்டார்களா? ‘வேலியே பயிரை மேயும்’ ஒரு கதையாக இந்த வடமாகாணசபையினுடைய செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் இருந்து யார் செயற்படுத்துகின்றார்கள். மூன்று அமைச்சர்களும் செய்த லஞ்ச ஊழல் குற்றம் என்ன? இதன் பின்னணியில் யார்? யார்? செயற்படுகின்றார்கள். லஞ்ச ஊழல் தொடர்பாக முதல் முதலில் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் மீதே குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை வடமாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன், தியாகராசா இருவரும் 45வது அமர்வில் அவையில் தெரிவித்திருந்தனர். பின்னர் தியாகராசா அவர்கள் தான் கூறியது தவறு என ஊடகங்களில் மன்னிப்புக் கேட்டார். இங்கு நடந்தது என்ன?

ஆயுதக்கட்சிகளுடன் இணைந்து பயணிக்கத் தயார் இல்லை என்று கூறிய முதலமைச்சர் இன்று தனது அரசியல் இணைப்புக்காக ஆயுதக்கட்சிகளை எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் அமைத்துக்கொண்டுள்ளார். இதிலொரு விடயம் தெளிவாகின்றது.  ‘பிறருக்குக் குழி வெட்டுகின்றவன் தான் அந்தக் குழியில் விழமாட்டேன் என்று நினைத்து வெட்டுகின்றான். அவனும் அந்தக் குழியில் விழுவான் என்பதை அறியாமல்’ அதுபோன்ற செயற்பாடே தற்போழுது வடமாகாணசபையில் இடம்பெற்று வருகின்றது.

தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தின்படி வடமாகாணசபையைச் சீர்குலைப்பதேயாகும். இதற்கு தற்பொழுது பகடைக்காயாக பயன்படுத்தப்படுவது முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் அவர்கள்.

வடமாகாண சபையின் ஒற்றுமையை அரசாங்கத்திற்கு நிலைநாட்ட முடியாத இவர்கள் தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்கப்போகின்றார்களா? அதிகார அரசியல் என்று இல்லாமல் போகின்றதோ அன்று தான் தமிழ் மக்களுக்கான ஒரு விடிவினை வென்றெடுக்க முடியும். தமிழினத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பதே அரசாங்கத்தினுடைய நீண்டநாள் திட்டம். முதலமைச்சருக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் கட்சிகள் அவரை ஐந்து பிரபாகரனாக, மூன்று உமாமகேஸ்வரனாக, இரண்டு சபாரத்தினமாக, இரண்டு பாலகுமாராக, இரண்டு பத்மநாபாவாகப் பார்க்கின்றார்கள். இத் தலைவர்கள் உண்மையில் தமிழினத்தின் எழுச்சிக்காக உணர்வெழுச்சியுடன் செயற்பட்டவர்கள். இவர்களின் கால்தூசிக்குக் கூட முதலமைச்சர் தகுதியற்றவர். காரணம் போராட்டம் என்பதே இவருக்குத் தெரியாது ‘கரையான் புத்தெடுக்க பாம்பு குடிகொண்டது போன்று’ இன்று முதலமைச்சரின் அரசியல் நகர்கின்றது. பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்தவர் விக்னேஸ்வரன் என்பதைத் தெரிந்தும்  கூட்டமைப்பினரது கருத்துக்களை செவிமடுக்காது முதலமைச்சராக விக்னேஸ்வரனைக் களமிறக்கிய சம்பந்தன், சுமந்திரன் இருவர்களுக்கும் நடுவீதியில் வைத்து செருப்பால் அறையவேண்டும்.

வானத்தால் போன சனியனை ஏணி வைத்து இறக்கியவர்கள் இவர்களே!
முதலமைச்சருடைய இனவாதக் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. ஆனால் அவர் பேரினவாதிகளுடன் சம்பந்தம் கலந்திருப்பதனால் அவ்வாறு கூறும் தகுதியையும் அவர் இழந்து விடுகின்றார். தற்பொழுது இருக்கக்கூடிய முதலமைச்சர் அவர்களை அன்று இந்த ஆயுதக் கட்சிகள் படுகேவலமாக விமர்சித்திருந்தனர். இன்று சம்பந்தனை விட ஐயா நீங்கள் தான் தஞ்சம் என்று அவர்காலடியில் சரனாகதியடைந்துள்ளனர்.

நீதியரசராக இருந்தபொழுது அவருடைய நடவடிக்கைகள் வேறு. அரசியல்வாதியாக வந்த பின் அவருடைய நடவடிக்கைகள் வேறு. தனக்கான மதிப்பினையும், மரியாதையினையும் யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டது போல எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

தற்பொழுது அதிகாரத்தில் இருக்கின்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்து அதனை வெளிச்சம் போட்டுக்காட்டி என்ன செய்யப்போகின்றார். உண்மையில் அவர்கள் ஊழல் மோசடி செய்திருந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். எந்தெந்த அமைச்சர்கள் எவ்வாறான ஊழல் மோசடிகளை மேற்கொண்டார்கள் என்பதனை அறிய தொடர்ந்தும் தினப்புயலுடன் இணைந்திருங்கள்.

தொடரும்…

SHARE