அஜித் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். இவர் தற்போது தல-57 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஐரோப்பியா படப்பிடிப்பு முடிந்து வீட்டில் சில நாட்கள் இருந்த அஜித், தற்போது அடுத்துக்கட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த வருடம் அஜித் தன் வீட்டில் வேலைப்பார்ப்பவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தது அனைவரும் அறிந்ததே.
வீடு மட்டும் கட்டிக்கொடுத்ததோடு நிற்கவில்லை, அவர்களை தினமும் வேலையில் வந்து விடுவதற்கும், அழைத்து செல்வதற்கும் வண்டி வைத்து கொடுத்துள்ளாராம்.
இதுமட்டுமின்றி அந்த பகுதியில் அடிக்கடி மின்சாரம் நிற்பது அஜித்திற்கு தெரிய வர, எல்லோர் வீட்டிற்கும் இன்வெட்டரும் வாங்கி கொடுத்துள்ளாராம்.