படைவீரர்களின் நலன்களில் அரசாங்கம் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்றுக்கொண்ட படைவீரர்களை நாட்டின் அபிவிருத்திப் பணியில் இணைத்து கொள்ளும் திட்டத்தின் முதல் கட்டமாக இன்றைய தினம் 50 ஓய்வு பெற்ற படையினருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாக இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் படைவீரர்களின் நலன்புரியில் கூடுதல் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர்களின் நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
படைவீரர்களின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிமயனங்களை வழங்குவதனால் அரசாங்க பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.