குற்றத்தை ஒப்புக்கொண்ட ரம்மித் ரம்புக்வெல்லவிற்கு நீதிமன்றம் அபராதம்

226

ramnth

முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனும் கிரிக்கட் வீரருமான ரம்மித் ரம்புக்வெல்ல நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கவனயீனமாக வாகனத்தை செலுத்தி கொழும்பு சுதந்திர வீதியில் வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டதாக ரம்மித் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஐந்து குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொள்வதாக ரம்மித் ரம்புக்வெல்ல இன்று நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.

குடிபோதையில் வாகனத்தை செலுத்தியதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்ட ரம்மித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

மது போதையில் வாகனம் செலுத்தியமை, சொத்து சேதம் ஏற்படுத்தியமை, கவனயீனமாக வாகனம் செலுத்தியமை, போலி இலக்கத்தகட்டுடன் கூடிய வாகனத்தை செலுத்தியமை, உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக ரம்மித் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.குற்றத்தை ஒப்புக்கொண்ட ரம்மித் ரம்புக்வெல்லவிற்கு நீதிமன்றம் 29000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரம்மித்தின் சாரதி அனுமதிப்பத்திரத்தை கொழும்பு மேலதிக நீதவான் (மோட்டார் போக்குவரத்துப் பிரிவு) சந்தன கலங்சூரிய விடுவித்துள்ளார்.

SHARE