எச்ஐ.வி தொற்று இலங்கையில் அதிகரிப்பு

253

hiv-aids-l
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்க ளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில், இந்த வருடம் எச்.ஐ.வி தொற்றுள்ள 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களில் 25 வயதிற்கும் மேற்பட்ட ஆண்கள் எனவும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை யில் அதிகரிப்பு பதிவாகியுள்ளமைக்கு காரணம், இது குறித்த பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையே எனவும் அவர் தெரிவித்தார்
SHARE