உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கும் கட்சிகளுக்கும் இடையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
எல்லை நிர்ணய குழு அறிக்கை தயாரித்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் திருத்தச் சட்டம் தொடர்பில் இதன் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமை மற்றும் அதனை துரித கதியில் நடத்துவதற்கான தடைகள், அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு கட்சிகளை தெளிவுபடுத்த உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.