அத்துருகிரிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மீது விசாரணை! பூஜித் ஜயசுந்தர

209

download

அத்துருகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது மனித உரிமை கேந்திர நிலையம் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுச் செயற்பாட்டாளரான அர்ஜூன் என்பவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி தப்பிச் சென்றதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தி சந்தேக நபரான அர்ஜூன் தப்பிச் சென்றதாகவும் இதன் போது பொலிஸார், அர்ஜூன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காயத்துடன் அவர் தப்பிச் சென்றதாகவும் செய்திகளில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவரின் ஒன்றுவிட்ட சகோதரி ஒருவரின் மகளுடன் அர்ஜூன் ஏற்படுத்திக் கொண்டிருந்த காதல் உறவினை நிறுத்தும் நோக்கில் இவ்வாறு பாதளா உலகக் குற்றச்சாட்டு சுமத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை கேந்திர நிலையம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து சுயாதீனமான விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

SHARE