நவீனரக ஸ்மார்ட் போன்களை களவாடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 மில்லியன் ரூபா பெறுமதியான ஸ்மார்ட்போன்களை திருடிய 16 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து குறித்த தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன. இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கைது செய்யும் போது அவர்களிடம் 65 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் அலுத்கம பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளர்.
சந்தேகநபர்களை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.