இலங்கை உட்பட்ட நாடுகளின் அகதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில், நியூசிலாந்து,அவுஸ்திரேலியா மீது குற்றம் சுமத்தியுள்ளது.
அகதிளுக்கான உரிமை என்ற அவுஸ்திரேலியாவின் ஒரு ஆங்கில இணையப்பக்கத்தில் இந்தகுற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை ஏற்றுக்கொள்ள நியூசிலாந்து தயாராகவே உள்ளது.எனினும் அவுஸ்திரேலியா அந்த வாய்ப்பை நியூஸிலாந்துக்கு வழங்க மறுத்து வருகிறது.
இது, தமது நாட்டுக்கு வரும் அகதிகளை தவிர்த்துக் கொள்வதற்காகவே அவுஸ்திரேலியாவினால்மேற்கொள்ளப்படுவதாக நியூசிலாந்து குற்றம் சுமத்தியுள்ளது.
ஏற்கனவே கிறிஸ்மஸ் தீவிலும், மானுஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளஇலங்கை அகதிகளை ஏற்றுக்கொள்ள நியூசிலாந்து தயார் என்று அறிவித்திருந்தது.
எனினும் அதனை அவுஸ்திரேலியா கணக்கில் கொள்ளவில்லை.
நியூசிலாந்தின் இந்தக் கோரிக்கைக்கு வாய்ப்பளித்தால், தமது நாட்டை நோக்கி.அகதிகள் அதிகளவில் வருவர் என்று அவுஸ்திரேலியா அச்சம் கொண்டிருக்கிறது.
இதனை நியாயப்படுத்த அவுஸ்திரேலியா முனைகின்ற போதும், அகதிகளின் உரிமைகளை மீறும்செயல் என்று நியூசிலாந்து குற்றம் சுமத்தியுள்ளதாக இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.