சுவிற்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் Robin Quartarone (28). இந்த இளம் வயதில் இவர் செய்து வரும் தொண்டுகள் ஏராளம்.
அனாதைகளுக்கு, வறுமையில் வாடுபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
பள்ளிக்கூட சுவர்களுக்கு பெயிண்ட் அடிப்பது, தேவையானவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வது, தாகம் தீர்க்க தண்ணீர் கேன் வாங்கி தருவது என பல உதவிகளை இந்த மனிதர் செய்து வருகிறார்.
Robin அடிக்கடி அனாதை ஆசிரமங்களுக்கு செல்வது வழக்கம். அங்கு வசிக்கும் ஒரு ஏழு வயது சிறுமியை அவர் தத்தெடுக்க முடிவெடுத்துள்ளார்.
இந்த ஏழு வயதுக்குள்ளேயே அந்த சிறுமி பல துன்பங்களை அனுபவித்தவள் என்ற விடயத்தை அவர் கேள்வி பட்டு அவரை தத்தெடுக்க முடிவெடுத்தார்.
தத்தெடுக்க அந்த நாட்டில் சட்டப்படி சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
அதிலும் முக்கியமாக தத்தெடுக்கும் நபருக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாகும்.
இன்னும் திருமணம் ஆகாத Robin இன்னும் சில மாதங்களில் தன் காதலியை மணந்து பின்னர் அந்த சிறுமியை சட்டப்படி தத்தெடுப்பேன் என உற்சாகத்துடன் கூறுகிறார்.