நானுஓயாவில் லொறி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

212

நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் 300 அடி பள்ளத்தில் லொறி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் மரணமானதுடன் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா மாகஸ்தன்ன மரக்கரி தோட்டத்தில் வேலை செய்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த பட்டா ரக லொறியே 12.10.2016 மாலை 6 மணியளவில் நானுஒயா கிளார்னன் பகுதியில் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறி சாரதி உட்பட பயணித்த மேலுமொருவருமாக இருவர் ஸ்தலத்திலே மரணமடைந்ததாகவும் மேலும் 7பேர் காயமுற்ற நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சாரதியின் கவனயீனத்தால் ஏற்பட்ட இவ்விபத்தில் காயமுற்றவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்கு கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed-2

unnamed-3

SHARE