வர்த்தகர் சுலைமான் கொலை வழக்கு தொடர்பில் இன்று விசாரணை!

260

solaniman

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

வர்த்தகரின் நிதி செயற்பாடுகளில் உதவியாக இருந்த நபரே இந்த கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் ஒன்றரை மாத கால திட்டம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தேகநபர்கள் ஒன்பது பேரில்,6 முஸ்லிம்,2 சிங்களவர்கள்,1தமிழர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE