யாழ்ப்பாணம் வரணி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று மதியம் கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த வர்த்தகர் கிளிநொச்சியில் உள்ள தனது அலுவலகம் ஒன்றிக்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எனினும் கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.