வவுனியாவில் வறட்சி காரணமாக 938 குடும்பங்களைச் சேர்ந்த 3,111 பேர் பாதிப்பு

291

varatchi

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியா மாவட்டத்தில் 938 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து நூற்று 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட வறட்சி நிலை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சன்னாசிப் பரந்தன், நெடுங்கேணி தெற்கு, மாமடு, நெடுங்கேணி வடக்கு, ஊஞ்சல் கட்டி, கற்குளம், ஒலுமடு, மருதோடை, நைனாமடு, அனந்தர்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 474 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 369 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதேபோல் வவுனியா பிரதேச செயலக பிரிவில் ஓமந்தை, ஆசிகுளம், பூந்தோட்டம், பறனாட்டாங்கல், சமனங்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 464 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 742 பேரும் பாதிப்படைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி வவுனியா மாவட்டத்தில் 938 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 111 பேர் பாதிப்படைந்துள்ளனர். இக் கிராமங்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரி.என்.சூரியராஜா கூறியுள்ளார்.

SHARE