மஹிந்த மற்றும் கோத்தபாயவுக்கு வழங்கப்பட்ட கௌரவ பட்டத்தை மீளப்பெறுமாறு கோரிக்கை!

231

1111_0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட கௌரவ பேராசிரியர் பட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொது மக்கள் கொள்கை மற்றும் அரசியல் பிரிவின் முன்னாள் பேராசிரியர் லக்சிறி பெர்னாண்டோ கடிதம் மூலம் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தருக்கு இந்த கடிதம் 2015ம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 11ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த மற்றும் கோத்தபாயவுக்கு கௌரவ பேராசிரியர் பட்டத்தை வழங்குவது தொடர்பாக தீர்மானித்தவர்களில் பிரதான நபர் தான் என அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எப்படியிருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டதன் பின்னர் அவரது செயற்பாடு ஜனநாயகமாக காணப்படவில்லை என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது பதவி காலத்திற்கு மேலதிகமாக மூன்றாவது பதவி காலத்திற்கு திட்டமிட்டதன் ஊடாக பேராசிரியர் பட்டத்தின் கௌரவம் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு தவறியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பல்கலைக்கழகத்திற்கு உள்ள அதிகாரத்திற்கமைய மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகிய இருவரினதும் பேராசிரியர் பட்டத்தை நீக்குமாறு லக்சிறி பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

1919ம் ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அவ்வாறு பேராசிரியர் பட்டம் மீண்டும் நீக்கப்பட்டுள்ளதனை ஒரு உதாரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை தனக்காக பிரதி பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறியினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE