காரப்பிட்டியவில் புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்க்கு நிதி திரட்டும் முகமாக பருத்தித்துறையில் ஆரம்பமாகிய நடைபயணம் நேற்று புளியங்குளத்தை வந்தடைந்தது.
இன்று காலை 5.00 மணியளவில் புளியங்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி இந்த நடைபயணம் ஆரம்பமாகியுள்ளது.
இதனை புளியங்குளத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த நடைபயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன , வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வங்கி ஊழியர்கள், இளைஞர் கழகங்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 2013 ஆம் ஆண்டு தெய்வேந்திர முனையில் ஆரம்பித்த நடைபயணம் பருத்தித்துறையில் முடிவடைந்து அந்த நிதியின் மூலம் யாழ் தௌ்ளிப்பளையில் புற்றுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.