50 வயதில் முதல் குழந்தையை பெற்றுக்கொள்ளவிருக்கும் பிரபல பாடகர்!

222

625-500-560-350-160-300-053-800-748-160-70

அமெரிக்காவின் பிரபல பாடகர்களில் ஒருவரான ஜேனட் ஜாக்சன் 50-வது வயதில் தனது முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

மறைந்த பிரபல பாடகரான மைக்கேல் ஜாக்சனின் தங்கையும் பாடகருமான ஜேனட் ஜாக்சன் இந்த தகவலை பத்திரிகை ஒன்றின் வாயிலாக அறிவித்துள்ளார்.

கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜேனட் ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Unbreakable என்ற தலைப்பில் உலக அளவில் இசைச் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள தயாராகி வந்த நிலையில் ஜேனட் குறித்த நிகழ்ச்சிகளை மறு திகதி அறிவிக்கும் வரை நடைபெறாது என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே குறித்த பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் குறிப்பிட்ட தகவலை அறிவித்துள்ளார். இந்த தகவலை அவரது குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.

இதுவரை 11 இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள ஜேனட் ஜாக்சன் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

7 முறை கிராமி விருது பெற்ற ஜேனட் தற்போது கத்தார் நாட்டவரான பெரும் வணிகர் ஒருவரை மூன்றாவதாக கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

625-0-560-320-500-400-194-800-668-160-90

SHARE